‘டியூட்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டியூட்’ திரைப்படம், முதல் நாளில் உலகளவில் ரூ.22 கோடி வசூலித்துள்ளது.

தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டிராகன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள படம்   ‘டியூட்’.

மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான ‘டியூட்’ படத்தில் நாயகியாக மமிதா பைஜு, சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு இப்படம் நேற்று (அக்.17) திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் டியூட் படம் முதல் நாளில் உலகளவில் ரூ.22 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.