“ஜனநாயகக் கடமை ஆற்றுவதைத் தவிர்க்காதீர்” – தவெக தலைவர் விஜய்!

ஒரு வாக்குகூட விடாமல் பதிவு செய்து நம் ஜனநாயகத்தின் வலிமையை உறுதி செய்ய வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வாக்காளப் பெருமக்களே,
வணக்கம்.

நமது வாக்கு- நமது உரிமை.
ஜனநாயகக் கடமை.

எக்காரணம் கொண்டும் வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள். தயவு செய்து பொறுமையுடன் காத்திருந்து,
வரிசையை விட்டு விலகாது நின்று, ஜனநாயகக் கடமை ஆற்றுவதைத் தவிர்க்காதீர்.

ஜனநாயகம் காப்பது நம் கடமை.

ஒரு வாக்குகூட விடாமல் பதிவு செய்து நம் ஜனநாயகத்தின் வலிமையை உறுதி செய்ய வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.