10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்கள் மனம் தளரவேண்டாம் என்றும் தோல்வி என்பது பெரிய வெற்றிக்கு அறிகுறி என்றும் அமைச்சர் பொன்முடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிகள் நேற்று வெளியானது. வெளியான தேர்வு முடிவுகளில் விழுப்புரம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 92.08
சதவிகித மாணவர்களும் பத்தாம் வகுப்பு தேர்வில் 90.17 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த தேர்வுகளில் தோல்வியுற்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் 10 பேர் உயிரிழப்பு முயற்சியில் ஈடுபட்டு 5 பேர் உயிரிழந்தனர். மற்ற 5 மாணவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, லட்சுமணன் ஆட்சியர் மோகன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மாணவர்களிடம் ஆறுதல் கூறியபோது அமைச்சர் பொன்முடி பெற்றோராக கை ஓங்கி இது போன்ற செயல்களில் ஈடுபடகூடாதென கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தவரக்ள் யாரும் வருத்த படவேண்டாம் எனவும் காலவிரையம் ஆக கூடாது என்பதற்காக ஜீலை மாதமே உடனடி தேர்வு நடைபெற்று உயர்கல்வியில் சேருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது என்றார்.
எனவே, மாணவர்கள் உயிரிழப்பு முயற்சியை மேற்கொள்ள வேண்டாம் என பாதம் தொட்டு அன்போடு பணிவன்போடு வணங்கி கேட்டுகொள்வதாகவும் அமைச்சர் கூறினார். மாணவர்களுக்கு உறுதுணையாக பெற்றோர்கள் இருக்க வேண்டுமென தெரிவித்த அவர், எல்லா பள்ளிகளிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் பொறியியல் கல்லூரிகளில் நிறைய இடம் காலியாக உள்ளதால் அனைவருக்கும் இடம்கிடைக்கும் யாரும் மனம் தளர வேண்டாம் என்றும் கூறினார்.
வாழ்க்கையில் எல்லாம் சகஜம் தோல்வி பெறுவர்கள் எல்லாம் பெரிய வெற்றிக்கு அறிகுறி என்பதால் எந்த காலகட்டமும் வீனாகாமல் உயர்கல்வியை தொடர வேண்டுமென அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.
– இரா.நம்பிராஜன்







