சாத்தூரில் அகழ்வாய்வு பொருட்கள் கண்காட்சி! – அமைச்சர்கள் திறந்து வைத்தனர்!

வெம்பகோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கு தொழிற்சாலை இருந்தது உறுதியானதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.  விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை…

வெம்பகோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கு தொழிற்சாலை இருந்தது உறுதியானதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பொதுமக்கள் பார்வைக்காக அரங்கு அமைத்து காட்சிப்படுத்தி உள்ளனர். இந்த அரங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தற்போது வரை மனிதன் இங்கு நடமாடி வருவது தெரிய வந்துள்ளது. நம் கால்தடம் பதியும் இடமெல்லாம்
வரலாறு புதைந்திருக்கிறது, கீழடிக்கு சற்றும் குறைவில்லாத வரலாற்று
தொன்மை வாய்ந்த இடமாக வெம்பகோட்டை அகழாய்வு உள்ளது.

கற்காலத்திற்கும், இரும்பு காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மக்கள்
பயன்படுத்திய பொருட்கள் நுண்கற்கால கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடு
மண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்காளி, சங்ககால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதன் மூலம் சங்கு தொழிற்சாலையும் இப்பகுதியில் இருந்தது தெரிய வருகிறது.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.