செப்டம்பர் மாத இறுதியில் திமுக பொதுக்குழு கூட்டம் ?

திமுகவின் உட்கட்சித் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் மாத இறுதியில் பொதுக்குழுவை கூட்ட திட்டமிட்டுள்ளது.   திமுகவின் 15 ஆவது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. கிளை, பேரூர்கழகம், மாநகர…

திமுகவின் உட்கட்சித் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் மாத இறுதியில் பொதுக்குழுவை கூட்ட திட்டமிட்டுள்ளது.

 

திமுகவின் 15 ஆவது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. கிளை, பேரூர்கழகம், மாநகர வட்டக்கழகம், ஒன்றிய – நகர – மாநகர பகுதிக்கழகம், மாநகரக் கழகம், மாவட்டம் என பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகின்றது.

 

இதுவரை பேரூர், ஒன்றியம் மற்றும் நகரம், மாநகரங்களுக்கான பகுதிக்கழக நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பும் ஒருசில நாட்களுக்குள் வெளியிட திமுக தலைமை திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்டச்செயலாளர் தேர்தல் முடிவடைந்தவுடன் பொதுக்குழு தொடர்பான அறிவிப்பை வெளியிட திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கத்தில் திமுகவின் பொதுக்குழுவை கூட்ட ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தவல் வெளியாகியுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.