முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலிலிருந்து ஓய்வு

திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவிலிருந்து விலகுவதாகவும், அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2009 இல் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்கு பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல், கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞரிடமே தெரிவித்துவிட்டதாக கூறியுள்ளார். தலைவர் கலைஞர் மறைவுக்குப்பின், அவர்களின் விருப்பத்தின்படி தலைவர் முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடன் கட்சிப் பணிகளை மட்டும் செய்து வந்தாக தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், கடந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று. தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று, அரசுப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதியன்று பதிவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்புலட்சுமி ஜெகதீசன், அரசியலிலிருந்து விலகினாலும் சமூக சேவையிலிருந்து ஒய்வில்லை. சமூக சேவை செய்ய திட்டமிட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயுள்ளனர்- முதலமைச்சர்

G SaravanaKumar

பள்ளிக்கல்வித்துறை திடீர் எச்சரிக்கை

Web Editor

விசில்போடு.. தனி விமானத்தில் யுஏஇ செல்லும் ’எல்லோ ஆர்மி’

Gayathri Venkatesan