இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு நல்லது செய்ததை திமுக, அதிமுக நிரூபித்தால் கட்சியை கலைக்க தயார் – சீமான் ஆவேசம்!

இஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு திமுக, அதிமுக நல்லது செய்துள்ளன என நிரூபத்தால் கட்சியை கலைத்து விட்டு செல்ல தயார் என சீமான் சவால் விடுத்துள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம்…

இஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு திமுக, அதிமுக நல்லது செய்துள்ளன என
நிரூபத்தால் கட்சியை கலைத்து விட்டு செல்ல தயார் என சீமான் சவால் விடுத்துள்ளார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் வடசென்னை மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வண்ணாரப்பேட்டை ஆர் கே நகர் திருவொற்றியூர் பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், என்எல்சி குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

அவர் பேசியதாவது:

என்எல்சி விவகாரத்தில் அறுவடை முடிந்த பிறகாவது நிலத்தை கையகபடுத்தியிருக்கலாம். விளைநிலங்களை தொட வேண்டாம். மின்சாரத்திற்கான மாற்றுவழி உள்ள நிலையில் விளை நிலத்தை கையகப்படுத்துவது ஏன்? மின்சாரத்திற்கு மாற்று வழி உள்ள நிலையில் நிலக்கரி சுரங்கங்கள் தோண்டப்பட்டால் மீணடும் அவ்விடத்தில் உயிர்கள் மீண்டும் வாழ முடியாது.

“டெல்டாக்காரன்”என்று பேசிய முதல்வர் தான் மீததேனுக்கு கையெழுத்திட்டார். தற்போது என்எல்சி விவகாரத்தில் விளைந்து வரும் பயிரை அழிக்கிறார். மனிதன் சாக்கடைக்குள்ளே செல்லும் அதே நேரத்தில் தான் சந்திரயான் விண்ணை நோக்கி செல்கிறது.

எங்கு சென்றாலும் தமிழ் பேசும் பிரதமர், உலகின் தொன்மையான மூத்த மொழியான தமிழை புதிதாக கட்டிய பாராளுமன்றத்தில் ஏன் இல்லை? மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை I.N.D.I.A. எம்பிகள் சந்தித்ததில் எந்த பயனும் இல்லை. என்எல்சி விவகாரம் தொடர்பாக 5 ஆம் தேதி போராட்டம் ஆர்ப்பாட்டம் முற்றுகை போன்றவை நடைபெறும்.

கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் நல்லதை இதுவரை திமுக மற்றும்
அதிமுக செய்திருக்கிறது என நிரூபித்தால் கட்சியைக் கலைத்துவிட்டு செல்ல
தயார்.

இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.