சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக வடக்கு மண்டல வழக்கறிஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் இன்று 10.30 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
அதன்படி, மேகதாது பிரச்சனையில் தவெகவின் அலட்சிய போக்கிற்கு கண்டனம் தெரிவித்தும், தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய கழக இளைஞரணி செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
அதேபோல கழக தலைவர் ஸ்டாலின் மீது சமூக வலைதளங்களில், தொலைக்காட்சி விவாதங்களில் அறுவெறுக்கத்தக்க வகையில் விமர்சிப்பவர்கள் மீது காவல்துறையில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததற்கு கண்டித்தும், கோவை மாணவர் கொலை வழக்கில் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், சட்டம் ஒழுங்கு சீர் குலைவு, கொளத்தூர் தொகுதியில் இ.வி எம் மெஷின் பாதுகாக்கப்படாத நிலை உள்ளிட்டவை குறித்தும் திமுக வழக்கறிஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படது.




