தீபாவளி பண்டிகை: தொடங்கயது அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு!…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்போருக்கான முன்பதிவு இன்று (அக்.11)  தொடங்கவுள்ளது. தீபாவளி பண்டிகை நவ12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்போருக்கான முன்பதிவு இன்று (அக்.11)  தொடங்கவுள்ளது.

தீபாவளி பண்டிகை நவ12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

விரைவு பேருந்துகளை பொருத்தவரை 30 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில், நவ.10ஆம் தேதி பயணம் மேற்கொள்வோர் அக்.11(புதன்கிழமை) முதல் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நவ.11-ஆம் தேதி பயணம் செய்வோருக்கான முன்பதிவு வியாழக்கிழமை (அக்.12) தொடங்கவுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தின் இணையதளம் அல்லது ற்ய்ள்ற்ஸ்ரீ செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இது தவிர, பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாமென அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.