அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் ராஜமவுலி!

இயக்குநர் ராஜமெளலி அடுத்ததாக இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு குறித்து தனது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவர் இயக்கிய பாகுபலி திரைப்படத்தின் மேக்கிங் இன்று வரை பெரிய அளவில்  பேசப்படுகிறது. பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் பெரிய அளவில் பாராட்டை பெற்றது.

இதனைத்தொடர்ந்து ராஜமவுலி ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற மற்றொரு பிரமாண்ட படைப்பை இயக்கினார். ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இரண்டு பெரிய ஹீரோக்களான ராம் சரண், மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவருக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், உலக அளவில் ரூ.1200 கோடி இமாலய வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனை, தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ”எஸ்எஸ்எம்பி 29” படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் மகேஷ் பாபு தனது தோற்றத்தை மாற்றி வருகிறார். மேலும் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா மற்றும் மலையாள நடிகர் பிருத்விராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் ஆக்சன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும், இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்று ராஜமவுலி தெரிவித்திருந்தார். இதன் படப்பிடிப்பை வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. அமேசான் காடுகளை மையமாக வைத்து எடுக்க படும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியிட ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாக கூறாப்படுகிறாது.

இதனிடையே, இப்படம் பற்றி ராஜமவுலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. அவரது பதிவில், பின்னணியில் சிங்கத்துடன், கையில் பாஸ்போர்ட்டுடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். மகேஷ் பாபுவை சமீப காலங்களாக ரசிகர்கள் லயன் என்று அழைத்து வருகிறார்கள். தனது படத்திற்கு மகேஷ் பாபுவின் கால்ஷீட் பெற்றுள்ளதைதான் ராஜமவுலி இப்படி சிம்பாலிக்காக சொல்கிறார் என்று கூறப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.