‘பைசன்’ படக்குழுவை பாராட்டிய தினேஷ் கார்த்திக்..!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் ‘பைசன்’ திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.

மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியில் வெளியான படம் ‘பைசன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்த இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ‘பைசன்’ திரைப்படம், ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

பைசன் திரைப்படத்தை அரசியல், சினிமா என பல்வேறு தரப்பினரும் பாராட்டி வந்தனர். இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் ‘பைசன்’ படத்தை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பைசன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்ன ஒரு அருமையான திரைப்படம் மாரி செல்வராஜ். உங்களின் படங்கள் அழுத்தமானதாகவும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன. இந்த எதார்த்தமான நடிப்பிற்காக துருவ் கடுமையாக உழைத்துள்ளார். மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தனர். படக்குழுவுக்கு என் வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

பைசன் திரைப்படம் கடந்த 21ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.