தொடங்கியது `விடாமுயற்சி’ டப்பிங் பணிகள்!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகிவரும் விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன. முதல் நாளான இன்று நடிகர் ஆரவ் உள்ளிட்டோரின் காட்சிகளுக்கு டப்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை லைகா நிறுவனம் பகிர்ந்துள்ளது. நடிகர்…

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகிவரும் விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன.

முதல் நாளான இன்று நடிகர் ஆரவ் உள்ளிட்டோரின் காட்சிகளுக்கு டப்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை லைகா நிறுவனம் பகிர்ந்துள்ளது. நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ்திருமேனியுடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

இவருடன் அர்ஜூன், ஆரவ், திரிஷா, ரெஜினா கெஸான்ட்ரா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.