அரசு சொத்தை விலைக்கு கேட்டேனா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த #VigneshShivan!

இயக்குநர் விக்னேஷ் சிவன் அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு கேட்டதாக செய்திகள் பரவிய நிலையில் அவர் அதற்கு விளக்கமளித்துள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த ‘சிவி’ என்னும் திகில் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் நடிகராக…

Did you ask for the price of the government property? #VigneshShivan puts an end to the controversy!

இயக்குநர் விக்னேஷ் சிவன் அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு கேட்டதாக செய்திகள் பரவிய நிலையில் அவர் அதற்கு விளக்கமளித்துள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த ‘சிவி’ என்னும் திகில் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் நடிகராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். தொடர்ந்து, கடந்த 2012ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படத்தினை இயக்கி பிரபலமான இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருகிறார். இவர் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து ‘எல்ஐகே’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த சூழலில், இயக்குனர் விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசின் கீழ் இயங்கி வரும் ஹோட்டலை விலைக்கு பேசியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இது தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகின. இந்த நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் இது தொடர்பாக வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,

“புதுச்சேரியில் நான் அரசு சொத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாக பரவி வரும் செய்தியை தெளிவுபடுத்துவதற்காக இந்த பதிவை பதிவிடுகிறேன். என்னுடைய ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் படப்பிடிப்பிற்காக பாண்டிச்சேரியில் உள்ள விமான நிலையத்தை பார்க்க போயிருந்தேன். அதற்கு அனுமதி பெற மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆகியோர்களை சந்திக்க வேண்டியிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த உள்ளூர் மேலாளர் எனது சந்திப்பிற்குப் பிறகு அவரிடம் ஏதோ ஒன்றைப் பற்றி விசாரித்தார். அது தவறுதலாக என்னுடன் இணைக்கப்பட்டுள்ளது. எந்த காரணமும் இல்லாமல் மீம்ஸ் உருவாக்கியது மிகவும் வேடிக்கையானவை; ஆனால் தேவையற்றவை”

இவ்வாறு இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.