ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்தில் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் பங்குபெற்றதை ஐ.நா மனித உரிமை ஆணையம் உறுதிபடுத்தியுள்ளது.
பிரபல நடிகையுடனான வீடியோ தொடங்கி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் நித்தியானந்தா. பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளது. இதையடுத்து நித்தியானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். சிறிது காலம் தலைமறைவாக இருந்தவர், 2019ம் ஆண்டு திடீரென கைலாசா என்ற தனிநாட்டை உருவாக்கியுள்ளதாக தன் இணையதள பக்கத்தில் அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து அவர் வீடியோக்களை வெளியிட்டு வந்தாலும், அவரின் இருப்பிடத்தை யாராலும் கண்டறியமுடியவில்லை. இதனிடையே கடந்த மாதம் ஜெனிவாவில் மனித உரிமைகள் கூட்டத்தில் கைலாசா நாட்டின் நிரந்தர தூதர் என்று சொல்லி விஜயபிரியா என்ற நித்தியானந்தாவின் சீடர் கலந்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. நித்தியானந்தா துன்புறுத்தப்படுகிறார் என்றெல்லாம் அவர் அந்தக் கூட்டத்தில் பேசியிருந்தார்.
இதையும் படிக்க: 11 ஆண்டுகள் மனைவியை வீட்டிற்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய வழக்கறிஞர் – ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்
இந்நிலையில் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் தூதரகம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‘மனித உரிமைகள் கூட்டத்தில் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள், தொண்டு நிறுவனம் என யாராக இருப்பினும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துகளை பதிவு செய்யலாம். அதேநேரத்தில் கைலாசா நாடு சார்பில் அவர்களை பேசிய உரை ஏற்றுக் கொள்ளப்படாது.’ என்று கூறப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா