பிரபல மாடல் தியாவின் திருமணத்தை நடத்தி வைத்த பெண் மதகுரு!

பிரபல இந்திய மாடலான தியா மிர்சா தனது திருமணத்தை நடத்தி வைத்த பெண் மதகுருவுக்கு நன்றி தெரிவித்து தனது திருமணப் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த 15 ஆம் தேதி பிரபல இந்திய…

பிரபல இந்திய மாடலான தியா மிர்சா தனது திருமணத்தை நடத்தி வைத்த பெண் மதகுருவுக்கு நன்றி தெரிவித்து தனது திருமணப் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த 15 ஆம் தேதி பிரபல இந்திய மாடல் தியா மிர்சா தனது காதலரான வைபவ் ரேக்கியை திருமணம் செய்துக் கொண்டார். நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துக் கொண்ட திருமண நிகழ்ச்சி பாம்பேயில் நடைபெற்றது. இதில் ஷீலா அட்டா என்ற பெண் மதகுரு திருமண சடங்கை நடத்திவைத்தார்.

இதையடுத்து அவர் வெளியிட்ட ட்வீடில் “எங்கள் திருமணத்தை நடத்திவைத்ததுக்கு நன்றி ஷீலா அட்டா. நாம் ஒன்றாக சேர்ந்து சமத்துவத்தை நிலைநாட்டுவதை நினைத்தால் பெருமையாக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.