அஜித் நடித்த துணிவு படத்தின் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ”சில்லா சில்லா” என்ற அந்த பாடலின் வெளியீட்டை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் மூன்றாவது படம் துணிவு. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ந்தேதி வெளியாக உள்ளதாகக் கூறப்படும் இந்த படத்தின் வெளியீட்டை அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை வெளியிட தயாரிப்பு நிறுவனத்தை அஜித் ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் படத்தின் ”சில்லா சில்லா” பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
அந்த பாடல் வெளியீட்டை திரையரங்குகள் முன்பு குவிந்து ரசிகர்கள் கொண்டாடினர். படத்தின் வெளியீட்டை கொண்டாடுவது போல் பாடல் வெளியீட்டையே அஜித் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ”சில்லா சில்லா” பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. வெளியான சிறிது நேரத்திலேயே பல லட்சம் பார்வைகளை யூடியூபில் பெற்றது.