முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனியின் ஐபிஎல்க்கு பயிற்சி செய்யும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
ஐசிசி உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை வென்ற அணியின் கேப்டனாக தோனி உள்ளார். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி 2020 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். 2004 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக சர்வதேச அரங்கில் அறிமுகமான தோனி, தனது 16 ஆண்டு கால வாழ்க்கையில் 538 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் இந்தியாவுக்காக 350 ஒருநாள், 90 டெஸ்ட் மற்றும் 98 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
தற்போது, ஐபிஎல் மினி ஏலம் டிச.19இல் தொடங்க உள்ளது. சிஎஸ்கே அணியில் இருந்து 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாவிட்டாலும், ட்ரெண்டிங்கில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர் தோனி. இந்நிலையில், ஐபிஎல் போட்டிக்காக பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், அவர் பயன்படுத்தியுள்ள பேட்டில், ப்ரைம் என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது.
https://twitter.com/ChakriDhoni17/status/1755279721963884703
இந்த கடை அவரது நண்பரின் கடை என்பது குறிப்பிடதக்கது. மேலும் தோனியும், அவருடைய பழைய நண்பர்களை அடிக்கடி சந்திப்பதை பார்க்க முடியும். இந்நிலையில் இந்த பதிவிற்கு பழயதை மறக்காத தோனி என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.







