மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தோனி – வைரலாகும் வீடியோ!

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது 43வது பிறந்த நாளை தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று,…

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது 43வது பிறந்த நாளை தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று, ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இவர் இன்று தனது 43வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி தனது மனைவி சாக்ஷியுடன் தோனி கேக் வெட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் மாறி மாறி கேக்கை ஊட்டி தங்களது அன்பை பரிமாறிக்கொண்டனர்.

அப்போது தோனியின் காலை தொட்டு வணங்குவது போல் சாக்ஷி விளையாட்டாக சைகை செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. தோனியில் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பலரும் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். மேலும் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.