வெளியானது தனுஷின் வாத்தி பட போஸ்டர்!

ஹாலிவுட்டில் தனுஷ் நடித்த the gray man படம் ஓ.டி.டி-யில் வெளியாகி தனுஷை உலகம் முழுவதும் பிரபலமாக்கியுள்ளது. சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரம் என்பதால் அவரின் காட்சிகள் அனைவரையும்…

ஹாலிவுட்டில் தனுஷ் நடித்த the gray man படம் ஓ.டி.டி-யில் வெளியாகி தனுஷை உலகம் முழுவதும் பிரபலமாக்கியுள்ளது. சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரம் என்பதால் அவரின் காட்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும் ஹாலிவுட் சினிமா பிரபலங்களின் கவனத்தை தனுஷ் பெற்றுள்ளதால் அடுத்தடுத்து பல ஹாலிவுட் படங்களிலும் அவர் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை பற்றி பேட்டி ஒன்றில் பேசும் போது நெறியாளர், ‘அப்படியே உங்கள் இளம் வயது தனுஷிடம் சென்று எதையாவது சொல்லவேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள்’ என்ற கேள்வியை கேட்டார். இதற்கு பதிலளித்த தனுஷ், ‘உன் தோற்றத்தை பற்றி பலரும் இன்று கிண்டல் செய்யலாம், அதைப்பற்றியெல்லாம் கவலை படாதே ஒரு நாள் ஹாலிவுட்டின் முன்னணி நடிகரேகூட உன்னை கவர்ச்சியான தமிழ் நண்பரே என்று அழைப்பார்’ என்று கூறுவேன்’ என பதிலளித்தார் தனுஷ். the grey man படத்தில் தனுஷை, ‘hello my sexy tamil friend’என முன்னணி நடிகர் அழைப்பதையே தனுஷ் அவ்வாறு குறிப்பிட்டு கூறினார். அந்த விடியோ இணையம் முழுவது ட்ரெண்ட் ஆகிவருகிறது. தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் ஒவ்வொருவருக்கும் தனுஷின் இந்த பேச்சு மோட்டிவேஷனை கொடுத்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

நாளை தனுஷின் பிறந்தநாள் எனும் நிலையில் தெலுங்கு இயக்குநரான வெங்கி அதுரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் poster-ஐ இன்று வெளியிட்டுள்ளார் தனுஷ். சமீபகாலங்களாக ஆக்‌ஷன் படங்களில் நடித்துக்கொண்டிருந்த தனுஷ் இந்த போஸ்டரில் ஒரு பக்குவம் வாய்ந்த வாத்தியார் தோற்றத்தில் காணப்படுகிறார். இதுவரை வெளியான இப்படத்தின் இரண்டு போஸ்டர்களிலும் போர்டில் எழுதுவது புத்தக அலமாரியில் அமர்ந்து எழுதுவது போன்ற பொறுப்பான வாத்தியாருக்கே உரிய வகையில் அமைந்திருப்பதால் தனுஷின் சினிமா கேரியரில் இது ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

போஸ்டரை தொடர்ந்து நாளை தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீஸரும் வெளியாகவிருப்பது தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. மேலும் இன்று மாலையே மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் 3வது சிங்கிள் பாடலும் வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு DNA எனப்படும் தனுஷ் அனிருத் கூட்டணியில் வெளியாகும் மூன்றாவது பாடல் என்பதால் இதற்கும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.