தனுஷ் நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வெளி வந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக…

தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு வெளி வந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது உருவான திரைப்படம் ‘ராயன்’. தனுஷின் 50-வது படமாக ‘ராயன்’ திரைப்படம் உருவாகியது.இதையடுத்து, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார்.

இதற்கிடையே, தனுஷ் தனது 52வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார்.இது தனுஷ் இயக்கும் 4வது படமாகும். இத்திரைப்படத்தை டாவ்ன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இத்திரைப்படத்திற்கு ‘இட்லி கடை’ என பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதையும் படியுங்கள் :INDvsSA | இந்தியா – தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டியில் இன்று மோதல்!

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று காலை 11 மணிக்கு புதிய அப்டேட் வெளியாகுமெனக் கூறியுள்ளார். இந்தப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகுமென தகவல் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.