ரிலீசுக்கு முன்பே தொடங்கிய வசூல் வேட்டை! ‘ராயன்’ ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா?

நடிகர் தனுஷின் ‘ராயன்’ படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கிய நிலையில் இதுவரை ரூ. 2.1 கோடி வரை வசூல் செய்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்கள்…

நடிகர் தனுஷின் ‘ராயன்’ படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கிய நிலையில் இதுவரை ரூ. 2.1 கோடி வரை வசூல் செய்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது உருவான திரைப்படம் ‘ராயன்’. இந்த திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.  தனுஷின் 50-வது படமாக உருவாகியுள்ள ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது கடந்த ஜூன் 13ஆம் தேதி வெளியிடப்பட இருந்த இந்த திரைப்படம் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 26ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இதையும் படியுங்கள் : டிஎன்பிஎல் கிரிக்கெட்: மதுரை அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது கோவை அணி!

கடந்த வாரம் ‘ராயன்’ திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கிய நிலையில், வசூல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாளை மறுநாள் ‘ராயன்’ திரைப்படம் வெளியாகயுள்ள நிலையில் இதுவரை ரூ. 2.1 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதனால் இப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.