அருண் மாதேஸ்வரண் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் வெளியான ’வாத்தி’ திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து, சாணிக் காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரண் இயக்கும் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.1930-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.
தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ’கேப்டன் மில்லர்’ படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. தொடர்ந்து படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது.
இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தை தீபாவளிக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தில் மிகப்பெரிய சண்டைக்காட்சியைப் படக்குழு தற்போது நிறைவு செய்துள்ளது. கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் முடிவடைய இருக்கின்றது. எனவே படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.








