திருப்பதி கோயிலில் பக்தர்கள் சுமார் 24 மணிநேரம் காத்திருந்து இலவச தரிசனம் செய்கின்றனர்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும்
திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளதால் திருமலையில் உள்ள
வைகுண்டம் காத்திருப்பு மண்டப அனைத்து அறைகளிலும் பக்தர்கள்
கூட்டம் நிரம்பி வழிகிறது.
திருமலைக்கு சென்று வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் இடம் கிடைக்காத
பக்தர்கள் ஐந்து கிலோ மீட்டர் நீள வரிசையில்இலவச தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது. .
300 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு 4 மணி நேரமும், இலவச தரிசன டோக்கன் வாங்கிய
பக்தர்கள் 5 மணி நேரமும் காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டு செல்கின்றனர்.
நேற்று 62,005 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு கோவில் உண்டியலில் மூன்று
கோடியை 75 லட்ச ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.







