தசரா திருவிழாவில் கோடி கோடியாக பக்தர்கள் காணிக்கை

உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடை பெற்று முடிந்த தசரா திருவிழாவில் பக்தர்கள் காணிக்கையாக ரூ 3 கோடியே 50 லட்சத்தி 34 ஆயிரத்து 114 கிடைக்கப்பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடை பெற்று முடிந்த தசரா திருவிழாவில் பக்தர்கள் காணிக்கையாக ரூ 3 கோடியே 50 லட்சத்தி 34 ஆயிரத்து 114 கிடைக்கப்பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெறும் தசரா திருவிழா கடந்த மாதம் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து பத்து நாட்கள் விமர்சையாக நடைபெற்றது.

தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் கடந்த ஐந்தாம் தேதி நள்ளிரவில் நடைபெற்றது. தசரா திருவிழாவை முன்னிட்டு மாலை அணிந்து வீடுகள் இணைந்து பக்தர்கள் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தர்மம் பெற்று அதனை சூரசம்காரம் நடந்த நாளில் கோவில் உண்டியலில் காணிகையாக செலுத்தி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

இந்த நிலையில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய காணிக்கைகள் என்னும் பணி கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்ற இந்த உண்டியல் காணிக்கை என்னும் பணியில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதில் ரூபாய் மூன்று கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்து 114 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும் 134.80 கிராம் தங்கமும் 2,416கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.