பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் இனத்தை நீக்குவது தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முழுவதும் தவறானவை என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஏழு பட்டியல் பிரிவினரை தேவேந்திர குல வேளாளர்களாக வகைப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்திகள் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும், உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏழு பட்டியல் பிரிவு இனங்களை தேவேந்திரகுல வேளாளர்களாக வகைப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும், தமிழ்நாட்டின் பட்டியல் இனங்களில் ஒன்றாக இது இருக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, பட்டியல் பிரிவில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மாற்றப்படுவார்கள் என்பது முழுவதும் தவறானது என்றும், உண்மை நிலையை அது பிரதிபலிக்கவில்லை என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.