வசூலில் மாஸ் காட்டும் #Devara… ஒரு வாரத்திற்குள் இவ்வளவு வசூலா?

ஜூனியர் என்டிஆரின் நடிப்பில் வெளியான தேவரா திரைப்படம் உலகளவில் ரூ. 400 கோடி வசூல் செய்துள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜூனியர் என்டிஆரின் நடிப்பில் உருவான தேவரா திரைப்படம் கடந்த 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.…

ஜூனியர் என்டிஆரின் நடிப்பில் வெளியான தேவரா திரைப்படம் உலகளவில் ரூ. 400 கோடி வசூல் செய்துள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜூனியர் என்டிஆரின் நடிப்பில் உருவான தேவரா திரைப்படம் கடந்த 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கொரடால சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஜூனியர் என்டிஆரின் 30வது திரைப்படமாகும். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இப்படம் உலகளவில் ரூ. 400 கோடி வசூல் செய்துள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2 நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் கடும் சரிவை சந்தித்த நிலையில், இன்று நல்ல வசூலை செய்துள்ளது.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தற்போது ஜூனியர் என்டிஆர் நடித்து வருகிறார். அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க, ஜூனியர் என்டிஆர் ஆர்வம் காட்டிவரும் நிலையில், வாடிவாசல் படத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆரை வெற்றிமாறன் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.