டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் பி.ஆர்.எஸ். நிர்வாகி கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சே. சந்திரசேகா் ராவ் மகள் கவிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவா் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி இருந்த மனிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தது. அதன் தொடா்ச்சியாக தனக்கும் ஜாமீன் வழங்க கோரி கவிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் கவிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று மாலைக்குள் கவிதா சிறையில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.







