#Delhi | பேருந்தில் பெண்ணை சில ஆண்கள் துன்புறுத்தியதாக வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

This News Fact Checked by ‘FACTLY’ டெல்லி பேருந்தில் ஒரு பெண்ணை ஆண்கள் துன்புறுத்தும் வீடியோ ஒன்று வைரலானது. இதுகுறித்து உண்மைத் தன்மையை விரிவாக காணலாம். சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த…

This News Fact Checked by ‘FACTLY

டெல்லி பேருந்தில் ஒரு பெண்ணை ஆண்கள் துன்புறுத்தும் வீடியோ ஒன்று வைரலானது. இதுகுறித்து உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.

சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் டெல்லியில் பேருந்திற்குள் ஒரு சில ஆண்கள் ஒரு பெண்ணை துன்புறுத்துவதைக் காட்டுகிறது. ஒரு சில ஆண்கள் பெண் பயணியை தகாத முறையில் தொடுவதை வீடியோவில் காணலாம். வைரலான வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய ஃபேக்ட்லி உண்மை சரிபார்ப்பு ஊடகம் முடிவு செய்தது.

உண்மை சரிபார்ப்பு :

வைரல் உரிமைகோரலின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, இணையத்தில் முக்கிய வார்த்தைகளைத் தேடினோம். மேலும் வைரலான வீடியோவின் காட்சிகளைக் கொண்ட சில இடுகைகளைக் கண்டறிந்தோம் . ஒரு இடுகையில் உள்ள வீடியோவில் வாட்டர்மார்க் இருந்தது, அதில் ‘முழு வீடியோ:- பெனிவால்.’  என இடம்பெற்றிருந்தது.

இதை ஒரு குறியீடாக எடுத்துக் கொண்டு, முக்கிய வார்த்தைகளைத் தேடினோம் மற்றும் அமன் பெனிவால் எனும் பெயர் கொண்ட  YouTube சேனலில் அசல் வீடியோவைக் கண்டுபிடித்தோம் .

இந்த வீடியோவில் 0:27 நேரத்தில் பொறுப்பு துறப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து மறுப்பும் இடம்பெற்றுள்ளது. அதில் இது ஒரு ஸ்கிரிப்ட் வீடியோ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது போன்ற ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட வீடியோக்களை அமன் யூடியூப்பில் பதிவேற்றுவதைக் கண்டறிந்தோம். இந்த வீடியோக்களை இந்த இணைப்பில் கொடுக்கப்பட்ட லிங்கை க்ளிக் செய்து காணலாம் . மேலும் அமன் தனது முகநூல் பக்கத்தில் தன்னை ‘டிஜிட்டல் கிரியேட்டர்’  என்று  குறிப்பிட்டுள்ளார்.

முடிவு:

டெல்லி பேருந்தில் ஒரு பெண்ணை ஆண்கள் துன்புறுத்தும் வீடியோ ஒன்று வைரலானது. விசாரணையில் இந்த வீடியோ ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது மற்றும் உண்மையான சம்பவம் அல்ல என்பது நிரூபணமாகிறது.

Note : This story was originally published by ‘FACTLY and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.