இரட்டை இலை சின்னம் வழக்கு – சுகேஷ் சந்திரசேகருக்கு #bail

இரட்டை இலை சின்னம் வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக பிளவுபட்டது. சசிகலா தலைமையிலான அணிக்கு கட்சியின் சின்னத்தை…

Delhi special court , bail , Sukesh Chandrasekhar, arrest, symbol case

இரட்டை இலை சின்னம் வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக பிளவுபட்டது. சசிகலா தலைமையிலான அணிக்கு கட்சியின் சின்னத்தை மீட்க, இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறி, டி.டி.வி.தினகரன், இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் மீது கடந்த 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான புகாரை விசாரித்த டெல்லி குற்றப்பிரிவு போலீசார் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.1.3 கோடி மற்றும் சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையும் படியுங்கள் : America கோயிலுக்கு காஞ்சியில் தயாரான ரூ.1.25 மதிப்பிலான கோடி தங்க ரதம்!

இந்நிலையில் அவர் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே விசாரித்தார். நேற்று (ஆகஸ்ட் – 30ம் தேதி) இந்த வழக்கில் சுகேஷ் சந்திர சேகருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். திகார் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் மீது மேலும் பல வழக்குகள் உள்ளதால், லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அவரால் வெளியே வரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.