ராஜபாளையம் அருகே சமூக ஆர்வலரை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே திருவேங்கடபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலரான குருசாமி. இவர் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோபாலபுரம் ஊராட்சியில் நடைபெற்றுள்ள திட்ட பணிகள் குறித்தும், வரவு
செலவு கணக்குகள் குறித்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி
கேட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவி சுதாவின், கணவர் ஜெயக்குமார் குருசாமி நடத்தி வரும் ஜெராக்ஸ் கடைக்கு வந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டதற்காக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, ஜெயக்குமார் கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ, சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர் குருசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.