ஆஸ்திரேலியா 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, இந்தியா 4 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா எதிரான இரண்டாம் நாள், டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் நாளில், இந்தியா 185 ரன்களுக்கு அல் அவுட் ஆனது. இன்று, ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது, அதிக பட்சமாக பியூ வெப்ஸ்டர் 107 பந்துகளில் 57, ஸ்மித் 57 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா, 181 ரன்களுக்கு எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்தியா பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3, பும்ரா மற்றும் நிதிஷ் ரெட்டியும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தியா 4 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறத் தவறினால், இந்த ஆண்டின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை செல்ல முடியாத நிலையுள்ளது .







