#Pushpa2-ல் பிரபல கிரிக்கெட் வீரர்? வைரலாகும் புகைப்படங்கள்!

புஷ்பா 2 படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021-ல் வெளியான புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக…

புஷ்பா 2 படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021-ல் வெளியான புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்த இப்படத்தில் ஃபகத் பாசில், சுனில், அஜய் கோஷ், மைம் கோபி உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். சுகுமார் இயக்கிய இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார்.

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் இந்தியில் அதிக வசூலை ஈட்டியது. இந்தியில் மட்டும் ரூ,100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த வெற்றியை தொடர்ந்து புஷ்பா2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மெல்போர்னில் படப்பிடிப்பு ஒன்றில் டேவிட் வார்னர் பங்கேற்றுள்ளார். அநேகமாக இது புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பாக இருக்குமென ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்தாண்டு இறுதியில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.