முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஃபார்முக்கு திரும்பினார் டேவிட் வார்னர்.. ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி

டி-20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி-20 உலகக் கோப்பைத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. துபாயில் நேற்று நடந்த போட்டியில் இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் குசால் பெரேரா, சரித் அசலங்கா தலா 35 ரன்கள் எடுத்தனர். கடைசிகட்டத்தில் பனுகா ராஜபக்சே 33 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், ஆதம் ஜம்பா, பேட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. கடந்த சில போட்டிகளில் மோசமான ஃபார்ம் காரணமாக சொதப்பி வந்த டேவிட் வார்னர் அதிரடியில் இறங்கினார். அவர் 42 பந்துகளில் 65 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். கேப்டன் ஆரோன் பிஞ்ச் 23 பந்துகளில் 37 ரன்களில் டி சில்வா பந்துவீச்சில் போல்டாக, அடுத்து வந்த ஸ்மித்தும் ( 28 ரன்) ஸ்டாய்னிஸும் ( 16 ரன்) அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். அந்த அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இலங்கை தரப்பில் ஹசரங்கா 2 விக்கெட்களையும், தசுன் ஷனகா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

Advertisement:
SHARE

Related posts

மகாராஷ்டிராவில் சுற்றுலா தலமாக மாறும் சிறைச்சாலைகள்!

Jayapriya

சென்னையில் 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி

Halley karthi

பேய் விரட்டுவதாக பெண்ணை அடித்து துன்புறுத்திய சாமியார் கைது!

Ezhilarasan