இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 வயதான இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் அதிகாலை 3 மணியளவில் தூக்கிட்டு கொண்டதாகாவும், பின்பு அவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல். கடந்த சில நாட்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







