ஜவான் திரைப்படத்தை ஆஸ்கார் விருது வரை கொண்டு செல்ல விரும்புவதாக இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படம் செப்.7ஆம் தேதி உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் வந்தாலுமே படத்தின் வசூலுக்கு பாதிப்பில்லை. ஜெட் வேகத்தில் வசூலித்து வருகிறது ஜவான்.
இப்படம் உலகளவில் முதல்நாளில் ரூ.129.6 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முதல் நாளில் அதிகமாக வசூலித்த படமாக ஜவான் திரைப்படம் உள்ளது. 2,3,4வது நாள்கள் முறையே ரூ.240 கோடி, ரூ.384 கோடி, ரூ.520 கோடிகளாக இருந்தன. தற்போது 11-வது நாள் வசூல் விவரத்தினை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ஜவான் திரைப்படத்தை ஆஸ்கார் விருது வரை கொண்டு செல்ல விரும்புவதாக இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்று அவரிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த அட்லீ, திரைத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் கோல்டன் குளோப், ஆஸ்கார், தேசிய விருதுகள் மீது ஆசை இருக்கும் என தெரிவித்தார்.