கோட்டகுப்பம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலை அருகே, புதுகுப்பம் பகுதியைச் சேர்ந்த 6 மீன் வியாபாரிகள் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது பலமாக மோதியது.
இதில் லக்ஷ்மி மற்றும் கோவிந்தம்மாள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். காரில் பயணம் செய்த ஐந்து பேர் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.







