கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் #Biopic – அறிவிப்பு வெளியானது!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவுக்கு கிரிக்கெட்டிற்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு. கிரிக்கெட் தொடர்பான பல திரைப்படங்கள் இந்தி, தமிழ்,…

Cricketer Yuvraj Singh's #Biopic - Announced!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவுக்கு கிரிக்கெட்டிற்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு. கிரிக்கெட் தொடர்பான பல திரைப்படங்கள் இந்தி, தமிழ், தெலுங்கு என அனைத்து மொழி சினிமாக்களிலும் வெளியாகியுள்ளன. அதேபோல கிரிக்கெட் ஜாம்பவான்களின் பலரது வாழ்க்கை வரலாறுகள் புத்தகமாகவும், திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.

மாஸ்டர் பிளாஸ்டர் என உலகமே கொண்டாடிய சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக சச்சின் – பில்லியன் ட்ரீம்ஸ் எனும் பெயரில் வெளியானது. அதேபோல 1985ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 1985படத்தில் ரன்வீர் சிங், ஜீவா உள்ளிட்டோர் நடித்திருந்தனர், இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதேபோல  இந்திய கிரிக்கெட் அணிக்கு 2 உலகக் கோப்பைகளைப் பெற்றுத்தந்த முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின்  வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு “எம்.எஸ்.தோனி – அண்டோல்ட் ஸ்டோரி” எனும் பெயரில் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனியின் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தும் வகையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக ஜொலித்த யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறும், விரைவில் திரைப்படமாக வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் அறிவிப்பை டி-சீரீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தில் யுவராஜ் சிங் ஆக நடிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.