சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி!

உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி!

உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி, மற்றும் தொண்டையில் பிரச்னை என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கே. பாலகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நெஞ்சக சளி காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று (நவ.28) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது? எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்? என்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.