2,500 கிலோ தக்காளியுடன் லாரியை கடத்தி சென்ற தம்பதி கைது; தலைமறைவாக உள்ள மூவருக்கு காவல்துறை வலைவீச்சு…

பெங்களூரு அருகே 2 ஆயிரத்து 500 கிலோ தக்காளியுடன் லாரியை கடத்தி சென்ற தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள மூவரை போலீசார் தேடி வருகின்றனர். கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர்…

பெங்களூரு அருகே 2 ஆயிரத்து 500 கிலோ தக்காளியுடன் லாரியை கடத்தி சென்ற தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் பகுதியில் போரலிங்கப்பா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் 2 ஆயிரத்து 500 கிலோ தக்காளியை கோலார் நகரில் உள்ள சந்தைக்கு மினி லாரியில் ஏற்றி சென்றுள்ளார். அந்த லாரியை மடக்கிய மர்ம நபர்கள், தக்காளியை கடத்திச் சென்றனர்.

கடந்த 8ம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கர்நாடக போலீசார், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாஸ்கர், அவரது மனைவி சிந்துஜா ஆகியோரை கைது செய்தனர்.

தக்காளியை சென்னைக்கு கொண்டு சென்று 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தபின், லாரியை மீண்டும் பெங்களூருவில் விட்டுச் சென்றதாக தம்பதி தெரிவித்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.