இந்தியாவில் புதிதாக 16,678 பேருக்கு கொரோனா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,30,713 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் புதிதாக 26 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,25,454 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது.

தொற்றில் இருந்து 14,629 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து, இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,29,83,162ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.50 சதவீதமாக உள்ளது. இதுவரை நாடு முழுவதும் 198.88 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று 11,44,145 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.