முக்கியச் செய்திகள் கொரோனா

இந்தியாவில் புதிதாக 10,725 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 10,725 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கடைப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேலும் புதிதாக 10,725 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,43,78,920 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 94,047 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 488ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 385ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 2,10,82,34,347 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. ஒரேநாளில் புதன்கிழமை மட்டும் 23,50,665 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தோனேஷியாவில் தமிழ்நாடு மீனவர்கள் கைது; முதலமைச்சர் கடிதம்

G SaravanaKumar

அனைவருக்கும் திட்டங்கள் சென்று சேர்வது உறுதிபடுத்தப்படும்: முதலமைச்சர்

EZHILARASAN D

விளம்பரங்களில் இதையெல்லாம் கவனித்திருக்கிறீர்களா?

Sugitha KS