மனைவிக்கு கொரோனா தொற்று: மனைவியை கொன்று விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கணவர்

கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல்…

கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து மாநில அரசுகளும் திணறி வருகின்றன. இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் அதுல் லால் என்ற நபர் தனது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டத்தை தொடர்ந்து அவரை கொலை செய்துவிட்டு, மாடியில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து அவரது வீட்டின் அருகில் இருப்போர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் இதுகுறித்த விசாரணையை துவக்கினர். அதில், அதுல் லால் ரயில்வே துறையிலும், அவரது மனைவி ஒரு தனியார் நிறுவனத்திலும் பணிப்புரிந்தது தெரியவந்தது. இதையடுத்து இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.