கோரமண்டல் ரயில் விபத்து : ஒடிசா சென்ற அமைச்சர்கள் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒடிசா சென்ற அமைச்சர்கள் குழுவுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு…

கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒடிசா சென்ற அமைச்சர்கள் குழுவுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.

இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேற்று மாலை 3:30  வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் இன்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று மாலை இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒடிசா சென்ற அமைச்சர்கள், அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.