பெரியார் குறித்த சர்ச்சை கருத்து – நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன்!

தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் நேரில் ஆஜராக சீமானுக்கு, வடலூர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் குறித்து சர்ச்சைகுரிய கருத்துகளை சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தபெதிக, மே 17 உள்ளிட்ட பெரியாரிய அமைப்புகள் சீமானின் வீட்டருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் தந்தை பெரியார் குறித்த சீமானின் சர்ச்சைக்குரிய  கருத்துகளுக்கு  எதிராக அவர் மீது 60 இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டது. தொடந்து இது குறித்து, சீமானின் கருத்துகள் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்திருந்தது.

இந்த விவகாரத்தில் கடந்த கனவரி மாதம் சீமான் மீது வடலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி காவல் நிலையத்தில் சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று  அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி  சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டிற்கு நேரில் சென்று போலீசார் சம்மன் வழங்கினர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.