தொடர் கனமழை எதிரொலி | டெல்லியில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு!

டெல்லியில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அசாம், திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து…

டெல்லியில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அசாம், திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளிலும், பல்வேறு விளை நிலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விளை பொருள்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் எதிரொலியாக சந்தைகளில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.  குறிப்பாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. டெல்லியில் உள்ள மொத்தவிலை சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சில்லறை வணிகத்திலும், ஆன்லைனிலும் தக்காளி விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து உயரும் தக்காளி விலை... சென்னை கோயம்பேட்டில் கிலோ ரூ.80-க்கு விற்பனை! - News7 Tamil

அதேபோல் காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.50 வரை அதிகரித்துள்ளது. வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.  மேலும் தொடர் மழையால் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இதனால் வாகனங்களால் காய்கறிகளை கொண்டுவர முடியவில்லை எனவும் இதன் காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.