அமெரிக்கா ஏர்போர்ட்டில் ஜெட் விமானங்கள் மோதி பயங்கர விபத்து – வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவில் ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் 2 தனியார் ஜெட் விமானங்கள் மோதி கொண்டன, விபத்தில் பயணித்த ஒருவர் பலியானார் பலர் காயமடைந்தனர்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் கடந்த ஜன.29-ம் தேதி, வர்த்தக ஜெட் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று மோதிக் கொண்டதில் 67 பேர் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து, கடந்த ஜன. 31-ம் தேதி பிலடெல்பியாவில் மருந்து பொருட்களை ஏற்றி சென்ற விமானம் விபத்தில் சிக்கியதில் 6 பேர் உயிரிழந்தனர். அதோடு தரையில் இருந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் மேற்கு அலாஸ்காவில் சிறிய ரக விமானம் ஒன்று நோமி பகுதியில் விபத்தில் சிக்கியதில் அதில் இருந்த 10 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் ஜெட் விமானங்கள் வழக்கம் போல சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், விமான நிலையத்தில் 2 தனியார் ஜெட் விமானங்கள் மோதி கொண்டன. விபத்தில் ஒருவர் பலியானார். பயணித்த பலர் காயமடைந்தனர்.

இதுபற்றி மத்திய விமான போக்குவரத்து துறை நிர்வாகம் வெளியிட்ட தகவலில், நடுத்தர அளவிலான ஜெட் விமானம் ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு ஜெட் விமானம் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில், மோதிய வேகத்தில் பாதையில் இருந்து விலகி சென்றது என தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது.

கடந்த 2 வாரங்களில் இதுபோன்ற பெரும் விபத்துகளை அமெரிக்க விமான போக்குவரத்து துறை எதிர்கொண்டுள்ளது. இது குறித்து விசாரணை செய்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.