பாபர் மசூதி இடிப்பு தொடர்பான அவமதிப்பு வழக்குகள்; முடித்து வைத்த உச்சநீதிமன்றம்

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான அவமதிப்பு வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் இன்று முடித்து வைத்தது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி கரசேவர்களால் இடிக்கப்பட்டது. பாபர்…

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான அவமதிப்பு வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் இன்று முடித்து வைத்தது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி கரசேவர்களால் இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே. அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி லக்னோ சிறப்பு நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்தது.

இதற்கிடையே பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் அரசு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் உச்சநீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்டன. இந்த அவமதிப்பு வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் இன்று முடித்து வைத்தது.

2019ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்ட நிலையில் இதனை மீண்டும் விசாரிக்க அவசியப்படவில்லை என கூறி நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.