இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் வணிகப்போட்டி ஆணைய அதிகாரிகள் திடீர் சோதனை

சென்னையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இந்திய வணிக போட்டி ஆணைய அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னை இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில், இந்திய வணிக போட்டி ஆணைய அதிகாரிகள் மூன்று வாகனங்களில் சென்று திடீர்…

சென்னையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இந்திய வணிக போட்டி ஆணைய அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சென்னை இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில், இந்திய வணிக போட்டி ஆணைய அதிகாரிகள் மூன்று வாகனங்களில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அண்மையில் சிமெண்ட் விலை நிர்ணயிப்பதிலும் சக நிறுவனங்களுடன் இணைந்து சிமெண்ட் விலையை உயர்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுமட்டுமின்றி முறையற்ற வணிக போட்டியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனடிப்படையில் இந்திய வணிக போட்டி ஆணைய அதிகாரிகள், இந்தியா சிமெண்ட் நிறுவன அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதனிடையே, இந்திய வணிக போட்டி ஆணைய அதிகாரிகளின் சோதனை தொடர்பாக இந்தியா சிமெண்ட் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அந்நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய வணிக போட்டி ஆணையத்தின் அதிகாரிகள் தங்கள் அலுவலகத்தில் சோதனை நடத்தியதாகவும், தாங்கள் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.