முக்கியச் செய்திகள் விளையாட்டு

காமன்வெல்த்-பளுதூக்குதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா பளுதூக்குதல் வீராங்கனை ஹர்ஜீந்தர் கவுர் வெண்கலம் வென்று சாதனை படைத்தார்.

இங்கிலாந்தின் பர்மிங்ஹான் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இடையே நடைபெறும் இந்த போட்டியில் இந்தாண்டு 72 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இதில், தடகளம், பேட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் இடம்பெறுகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஜூலை 28-ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் ஆகஸ்டு 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவை சார்ந்த 111 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.

பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சாணு தங்கப்பதக்கம் வென்றார். 55 கிலோ எடைப்பிரிவு கொண்ட மற்றொரு போட்டியில் பிந்தியா ராணிதேவி 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார்.

ஆண்களுக்கான 55 கிலோ எடை பிரிவில் சங்கட் சர்கார் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 61 கிலோ எடைப்பிரிவில் குருராஜா பூஜாரி 269 கிலோ எடையை தூக்கி வெண்கல பதக்கம் வென்றார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அச்சின்தா ஷூலி பளுதூக்குதலில் தங்கம் வென்று அசத்தினார்.

இந்நிலையில், பளுதூக்குதலில் மேலும் ஒரு பதக்கத்தை இந்தியா வென்றது.
மகளிருக்கான 71 கிலோ எடைப் பிரிவில் ஹர்ஜீந்தர் கவுர் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். ஸ்னாச்சில் 93 கிலோவையும், கிளீன் அண்ட் ஜெர்க்கில் 119 கிலோவையும் தூக்கி 3வது இடம் பிடித்தார். பளுதூக்குதலில் இந்தியாவுக்கு இது 7 பதக்கம் ஆகும். ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு இது 9 ஆவது பதக்கம் ஆகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு.

G SaravanaKumar

பக்தர்கள் மீட்டெடுத்த நந்தவனம்

G SaravanaKumar

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடனான அனுபவம் குறித்து பகிரும் ஓட்டுனர்

Arivazhagan Chinnasamy