நகைச்சுவை நடிகர் கோவை குணா காலமானார்

நகைச்சுவை நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கோவை குணா உடல்நலக்குறைவால் காலமானார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் கோவை குணா. இவரது டைமிங்கான காமெடியும்…

நகைச்சுவை நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கோவை குணா உடல்நலக்குறைவால் காலமானார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் கோவை குணா. இவரது டைமிங்கான காமெடியும் மிமிகிரி செய்யும் திறமை மூலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர் கோவை குணா. கவுணடமணி, ராதாரவி, சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் குரலை அப்படியே மிமிக்ரி செய்யும் திறமையையும் கொண்டிருந்தார்.

இந்நிலையில் குணா உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் கோவை விலாங்கு குறிச்சியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படவுள்ளது. நாளை தகனம் செய்யப்பட இருக்கிறது. இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.